விஞ்ஞானபூர்வ பேய் படம்!

தினமலர்  தினமலர்
விஞ்ஞானபூர்வ பேய் படம்!

பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து, இயக்கும், கைலா படத்தில், தானா நாயுடு கதை நாயகியாக நடிக்கிறார். கவுசல்யா, அன்பாலயா பிரபாகரன், குழந்தை நட்சத்திரம் கைலா உள்ளிட்டோர், முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

படம் குறித்து தானா நாயுடு கூறுகையில், ''பேய்களை ஆராய்ச்சி செய்யும் எழுத்தாளராக நடிக்கிறேன். பல ஆண்டுகளாக பூட்டப்பட்டிருக்கும் பங்களாவில், நான் தங்கும்போது, அங்கு நடக்கும் திகில் சம்பவங்களே கதை. விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படமாக, 13ம் தேதி வெளியாகிறது,'' என்றார்.

மூலக்கதை