தெலுங்கானா கொந்தளிக்க: டில்லியில் திருமண நிகழ்ச்சியில் சந்திரசேகர ராவ்

தினமலர்  தினமலர்
தெலுங்கானா கொந்தளிக்க: டில்லியில் திருமண நிகழ்ச்சியில் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில், தலைநகர் ஐதராபாத் அருகே, புறநகர் பகுதியான ஷாம்ஷதாபாதில், 27 வயது கால்நடை பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, டிரக் டிரைவர்கள், கிளீனர்கள் என, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

'இந்த கொடூரத்தைச் செய்த குற்றவாளிகளை விசாரணையில்லாமல் துாக்கிலிட வேண்டும்' என பார்லி.யில்பெண்கள் ஆவேச குரல் எழுப்பினர். நாடு முழுவதும் பலர் கொந்தளிப்புடன் உள்ள நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், சம்பவம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்காமல் , நேற்று வி.ஐ.பி. ஒருவரின் இல்ல ஆடம்பர திருமண நிகழச்சியில் பங்கேற்க டில்லியில் வந்தார்.இதையறிந்த பத்திரிகையாளர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். பெண் டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்க முயற்சித்தனர்.
அப்போது டி.வி.நிருபர் ஒருவர் ,பெண் டாக்டர் கொலை சம்பவத்தின் வீரியத்தை உணராமல், நீங்கள் திருமணம் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து டில்லி வந்துள்ளீர்களே முதல்வரை பார்த்து கேள்வியெழுப்பினார்.எனினும் சந்திரசேகரராவிடம் பேட்டி எடுக்க விடாமல் அவரது பாதுகாவலர்கள் பத்திரிகையாளர்களை பின்னோக்கி தள்ளிவிட்டனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை