மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி

தினமலர்  தினமலர்
மாற்றுத்திறனாளியை நெகிழ வைத்த ரஜினி

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்து பிரபலமான மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்பம் தெரிவித்திருந்தார்.

ரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி - பிரணவ் சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து அவரை ரஜினி நெகிழ வைத்தார். ரஜினியின் புகைப்படத்தை, அவருக்கு அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மூலக்கதை