அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

அலாஸ்கா : அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இந்த நிலடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தவகல்கள் இன்னும் வெளியாகவில்லை. அலாஸ்காவில் கடந்த நவ., மாதத்தில் அலூட்டியன் மற்றும் ஆண்ட்ரியானோஃப் தீவுப் பகுதிகளில் நிலடுக்கம் ஏறபட்டது. மேலும் கடந்த 2018 நவம்பர் மாதமும் அலாஸ்காவில் 7.0 ரிக்டர் அளவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சாலைகள் மற்றும் பாலங்கள் மிகுந்த சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மூலக்கதை