விக்ரம் படத்தில் இணைந்த ஷேன் நிகம்

தினமலர்  தினமலர்
விக்ரம் படத்தில் இணைந்த ஷேன் நிகம்

மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் சர்ச்சையில் அடிபட்டு வருகிறார் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஷேன் நிகம்.. இரண்டு மூன்று ஹிட் படங்களில் நடித்ததால், தற்போது தான் நடித்து வந்த வெயில், குர்பானி ஆகிய படங்களில் படத்தை முடிப்பதற்குள்ளாகவே அதிக சம்பளம் கேட்டு முரண்டு பிடித்தார்..

அவர்கள் மறுக்கவே, இவர் தயாரிப்பாளரை பழிவாங்குவதற்காக வெகுநாட்களாக படத்திற்காக வளர்ந்திருந்த முடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார். அதனால் மலையாள திரையுலகில் தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு விதிக்கப்படும் நிலைக்கு ஆளாகி, நடிகர் சங்கம் தலையீட்டால். மயிரிழையில் தப்பியுள்ளார்.

இந்த நிலையில் தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் விக்ரம் நடிக்க உள்ள படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷேன் நிகம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளதாம்.. இதுதவிர சீனு ராமசாமியின் டைரக்சனில் உருவாக இருக்கும் என்கிற படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருந்தார் இந்த ஷேன் நிகம். ஆனால் அதற்கும் தடை வாங்கி உள்ளனர்.

மூலக்கதை