விஜய் - ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களின் சண்டையை நிறுத்திய விநியோகஸ்தர்

தினமலர்  தினமலர்
விஜய்  ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களின் சண்டையை நிறுத்திய விநியோகஸ்தர்

விஜய்யை போலவே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் நடனம் ஆடுவதில் முதலிடத்தில் இருக்கிறார். ஆனால் நடனம் ஆடுவதில் சிறந்தவர் யார் என்று கடந்த இரண்டு நாட்களாக சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களும் வார்த்தை யுத்தம் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

இந்தநிலையில் திடீரென ஒரு போன்கால் இவர்களது சண்டையை முடித்து சமரசம் செய்து வைத்துள்ளது. விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் தெலுங்கு பதிப்பான விசில் படத்தை ஆந்திராவில் வெளியிட்டவர் மகேஷ் எஸ்.கொனேரோ..

இவர் வெளியிட்ட டுவீட் ஒன்றில், “விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி.. விசில் படத்தை நல்லவித ரிலீஸ் செய்து வெற்றிப்படமாக்கியதற்கு வாழ்த்து தெரிவித்தார். அதைவிட முக்கியமான விஷயம் விஜய்யும், தாரக்கும் (ஜூனியர் என்.டி.ஆர்) ஒருவருக்கொருவர் போனில் பேசிக் கொண்டனர்.. அப்போது தெலுங்கு ரசிகர்கள் தனது படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அளித்ததாக விஜய் அவரிடம் நன்றி தெரிவித்தார்” என குறிப்பிட்டிருந்தார்..

அவ்வளவுதான். இந்த டுவீட் வெளியான மறுகணம் இரண்டு தரப்பு ரசிகர்களும் வார்த்தை மோதலை கைவிட்டு சகோதரா, நண்பா என பாசத்தை பொழிய துவங்கி விட்டனராம்.

மூலக்கதை