“ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள்” : பிரித்விராஜ்

தினமலர்  தினமலர்
“ரசிகர்களிடம் ஆரம்பத்திலேயே சொல்லி விடுங்கள்” : பிரித்விராஜ்

பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ட்ரைவிங் லைசென்ஸ்.. நடிகர் லாலின் மகன் ஜூனியர் லால் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிரால முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார் பிரித்விராஜ். ஒரு ரசிகனுக்கும் ஒரு ஹீரோவுக்குமான பந்தம் குறித்து இந்தப்படம் பேசுகிறதாம். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தில் நடித்தது குறித்து பிரித்விராஜ் கூறும்போது, “ரசிகர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் மீது பாசம் வைக்க கூடியவர்கள்.. அதனால் உங்கள் திரைமுகம் எது, நிஜ முகம் எது என்பதை ஆரம்பத்திலேயே அவர்களுக்கு சொல்லிவிட வேண்டும்.. அப்படி சொல்லாமல் திடீரென திரையிலிருந்து மாறுபட்ட நம் இன்னொரு முகத்தை அவர்களுக்கு காட்டினால் அவர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி விடுவார்கள்.. இந்தப்படமும் அதைத்தான் சொல்கிறது” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை