படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள்: கடுமையாகிறது சட்டம்

தினமலர்  தினமலர்
படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள்: கடுமையாகிறது சட்டம்

மலையாள திரையுலகில் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் படக்குழுவினர் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஷைன் டாம் சாக்கோ என்கிற வில்லன் நடிகர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்தநிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து சர்ச்சை செய்திகளில் சிக்கி வரும் இளம் நடிகர் ஷேன் நிகம் தான் நடித்துவந்த வெயில் மற்றும் குர்பானி ஆகிய படங்களில் அதிக சம்பளம் கேட்டு நடிக்க மறுத்தார்.

அதையடுத்து அவர் படப்பிடிப்பில் போதை பொருள் பயன்படுத்தினார் என்றும் இதனால் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்கே நள்ளிரவு ஆனது என்றும் அவர் நடித்துவரும் படத்தின் தயாரிப்பாளர்கள் இருவர் குற்றம் சாட்டியிருந்தனர்.. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கேரளா சட்ட அமைச்சர் ஏ.கே.பாலனிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, “சினிமா படப்பிடிப்பு தளங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவது உள்ளிட்ட ஒழுங்கீனமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக விரிவான சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார் சட்ட அமைச்சர் ஏ.கே.பாலன்.

மூலக்கதை