பேனா பரிசு: நெகிழ்ச்சியில் விவேக்

தினமலர்  தினமலர்
பேனா பரிசு: நெகிழ்ச்சியில் விவேக்

இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய படம் மனதில் உறுதி வேண்டும். இந்தப் படம் கடந்த 1987ல் ரிலீசானது. அந்தப் படத்தில் நடித்து அறிமுகம் ஆனவர் நடிகர் விவேக். அதன் பின், தொடர்ச்சியாக, 32 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். அவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்திருக்கின்றன. அரசு, தனியார் என அவர், தன்னுடைய நடிப்புக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

படங்களில் சமூக கருத்துக்களையும்; விழிப்புணர்வையும் நகைச்சுவையாக சொல்லும் திறன் படைத்த நடிகர் விவேக், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் தீவிர விசிறி. அதனாலேயே அவர், பசுமையை என்றும் நேசித்த அப்துல் கலாமின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் சென்று, லட்சக்கணங்கான மரங்களை நட்டு இருக்கிறார்.

இந்நிலையில், அவர் மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் மகளும், சினிமா படத் தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமியை சந்தித்தார். அவர், நடிகர் விவேக்கைப் பாராட்டி, அவருக்கு, பாலச்சந்தர் பயன்படுத்திய பேனா ஒன்றை பரிசளித்தார். நெகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்ட நடிகர் விவேக், இதற்காக நன்றி சொல்லி, டவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: யாருடைய எழுத்துக்களை படித்தும், படமாக பார்த்தும் திரைத்துறைக்கு வந்தேனோ... அவர் எழுத பயன்படுத்திய பேனாவே எனக்கு கிடைத்தது, எனக்கான பரிசு அல்ல வரம்! அன்போடு அதை எனக்கு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள். என்றார்.

மூலக்கதை