ஸ்ரீதேவி புத்தகத்தை வெளியிட்ட தீபிகா

தினமலர்  தினமலர்
ஸ்ரீதேவி புத்தகத்தை வெளியிட்ட தீபிகா

இந்தியாவின் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர், தன்னுடைய உறவுக்காரர் ஒருவருடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கடந்த ஆண்டு பிப்., 24ல் துபாய்க்குச் சென்றார். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர், அங்கிருக்கும் பாத் ரூமுக்குச் சென்றார். அங்கே வழுக்கி விழுந்ததில், அவர் பாத் டப்பில் விழுந்து இறந்து போனார்.

இது, இந்தி பட உலகம் மட்டுமல்ல; இந்தியாவின் மொத்த சினிமா ரசிகர்களையும் உலுக்கிப் போட்டது. இதைத் தொடர்ந்து, நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை புத்தமாக பதிவு செய்யும் பணியில் இறங்கினார் சத்யார்த் நாயக் என்பவர். அவருக்கு அந்த பணியைச் செய்ய ஒப்புதல் அளித்த, ஸ்ரீ தேவியின் கணவர் போனிக் கபூர், புத்தகத்தை வெளியிட, பெங்குயின் நிறுவனத்துக்கு உரிமை அளித்தார்.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீதேவி: கேர்ள் வுமன் சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பிடப்பட்டு, புத்தகம் தயாரானது. கடந்த ஆகஸ்டில், நடிகை வித்யா பாலனை வைத்து, புத்தகத்தின் முகப்பை வெளியிட்ட பெங்குயின் நிறுவனம், தற்போது, புத்தகத்தை நடிகை தீபிகா படுகோனை வைத்து வெளியிட்டிருக்கிறது.

புத்தக வெளியீட்டு விழா, மும்பையில் பிரமாதமாக நடந்தது. அந்த விழாவில் தான், நடிகை தீபிகா படுகோன், ஸ்ரீதேவி புத்தகத்தை வெளியிட்டார். இதில், சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

மூலக்கதை