சிரஞ்சீவி எடுத்த திடீர் முடிவு

தினமலர்  தினமலர்
சிரஞ்சீவி எடுத்த திடீர் முடிவு

அரசியலில் இருந்து விலகி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி, கைதி எண் 150 படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அடுத்தபடியாக கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த நிலையில், அடுத்தடுத்து சிரஞ்சீவியை வைத்து படம் இயக்க அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்கள், அவரை மீண்டும் இளவட்ட சிரஞ்சீவியாக வெளிப்படுத்தும் வகையிலான கதைகளை சொல்லியிருக்கிறார்கள். சிரஞ்சீவியோ, அந்த மாதிரி கதைகளில் நடிக்க மறுத்து விட்டாராம். தொடர்ந்து நடுத்தர வயது கொண்ட கேரக்டர்களில் தோன்றி, சமூகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல நினைக்கிறாராம். இதனால் இவருக்கு ஏற்றபடி கதையை மாற்றி வருகிறார்கள் இயக்குனர்கள்.

மூலக்கதை