துர்காவதியான அனுஷ்காவின் பாகமதி

தினமலர்  தினமலர்
துர்காவதியான அனுஷ்காவின் பாகமதி

அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் பாகமதி. ஹாரர் கதையில் உருவான இப்படத்தை அசோக் இயக்கியிருந்தார். அதையடுத்து சிரஞ்சீவியின் சைரா படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தவர், தற்போது ‛நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பாகமதி படத்தை ஹிந்தியில் துர்காவதி என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார்கள். ஹிந்தி பதிப்பையும் தெலுங்கில் இயக்கிய அசோக்கே இயக்குகிறார். அனுஷ்காவிற்கு பதில் பூமி பட்னேக்கர் நடிக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தை நடிகர் அக்சய் குமார், பூஷண் குமார் இணைந்து தயாரிகிறார்கள்.

மூலக்கதை