கோப்பை வென்றது விண்டீஸ் | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது விண்டீஸ் | நவம்பர் 29, 2019

லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லக்னோ டெஸ்டில் 9 விக்கெட்டில் வெற்றி பெற்ற விண்டீஸ் அணி கோப்பை கைப்பற்றியது.

இந்தியாவின் லக்னோவில் விண்டீஸ், ஆப்கானிஸ்தான் மோதிய டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 187 ரன்கள், விண்டீஸ் 277 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து இருந்தது. 

எளிய வெற்றி

இன்று மூன்றாவது நாள் போட்டி நடந்தது. ஆப்கானிஸ்தானின் அப்சர் 7 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ரஷித் கான் (1), யாமின் (1) இருவரையும் ஹோல்டர் வெளியேற்றினார். 3வது நாளில் 7.1 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்ய ஆப்கானிஸ்தான் அணி 120 ரன்னுக்கு சுருண்டது. விண்டீசின் ஹோல்டர், கார்ன்வல், செஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய விண்டீஸ் அணியை பிராத்வைட் (8) கைவிட்டார். கேம்பெல் (19), ஹோப் (6) அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். விண்டீஸ் அணி 1 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டில் வென்று, கோப்பை தட்டிச் சென்றது. 

மூலக்கதை