வார்னர், லபுசேன் சதம் * ஆஸி., அணி ரன் குவிப்பு | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
வார்னர், லபுசேன் சதம் * ஆஸி., அணி ரன் குவிப்பு | நவம்பர் 29, 2019

பிரிஸ்பேன்: பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் வார்னர், லபுசேன் சதம் விளாச, முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 302/1 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக பிரிஸ்பேனில் இன்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார்.

‘சூப்பர்’ ஜோடி

மழை காரணமாக சற்று தாமதமாக போட்டி துவங்கியது. ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பர்ன்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. பர்ன்ஸ் 4 ரன்னில் ஷகீன் அப்ரிதி பந்தில் சிக்கினார். அடுத்து வார்னர், லபுசேன் இணைந்தனர். தேநீர் இடைவேளைக்குப் பின் மழை காரணமாக போட்டி 2:00 மணி நேரம் தாமதம் ஆனது. 

மீண்டும் தொடர்ந்ததும், வார்னர், லபுசேன் கூட்டணி கடந்த டெஸ்ட் போல மீண்டும் மிரட்டியது. டெஸ்ட் அரங்கில் வார்னர் 23 வது, லபுசேன் 2 வது சதம் எட்டினர். இவர்களை பிரிக்க பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி எடுத்த எந்த முயற்சிக்கும் கடைசி வரை பலன் கிடைக்கவே இல்லை. 

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 294 ரன்கள் சேர்த்த வார்னர் (166), லபுசேன் (126) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது. 

 

294

வார்னர், லபுசேன் இணைந்து பகலிரவு டெஸ்டில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் (294 ரன், 2வது) சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றனர். இதற்கு முன் இங்கிலாந்தின் குக், ரூட் ஜோடி, விண்டீசிற்கு எதிராக 248 ரன்கள் (3வது விக்., பர்மிங்காம்) எடுத்ததே அதிகம். 

மூலக்கதை