தோனி ரசிகை தமன்னா | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
தோனி ரசிகை தமன்னா | நவம்பர் 29, 2019

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் எப்போதும் பொருத்தம் தான். கேப்டன் கோஹ்லி–அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங்–கீதா பாஸ்ரா என பலர் பாலிவுட் நடிகைகளை மணந்தனர்.

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா கூறுகையில்,‘ இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா என இருவரையும் பிடிக்கும்,’’ என்றார். இந்த வரிசையில் பிரபல நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார்.

‘டி–10’ தொடரைப் பார்க்க சமீபத்தில் அபுதாபி சென்றார். அப்போது கூறுகையில்,‘‘நான் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகை. ஏனெனில் நான் இந்தியாவை சேர்ந்தவர்,’’ என்றார்.

மூலக்கதை