டாம் லதாம் சதம் | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
டாம் லதாம் சதம் | நவம்பர் 29, 2019

ஹாமில்டன்: இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் லதாம் சதம் அடித்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி ஹாமில்டனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு ஜீத் ராவல் (5), கேப்டன் வில்லியம்சன் (4) அதிர்ச்சி அளித்தனர். பின், இணைந்த டாம் லதாம், ராஸ் டெய்லர் பொறுப்பாக விளையாடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தபோது, அரை சதம் அடித்த டெய்லர் (53) அவுட்டானார். 66 ரன்களில் கண்டம் தப்பிய லதாம், டெஸ்ட் அரங்கில் 11வது சதம் அடித்தார். பின், மழை வர முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. 54.3 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. லதாம் (101), நிக்கோல்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினார்.

 

மூலக்கதை