பகைவர்களாக மாறும் நண்பர்கள் * களை கட்டும் விண்டீஸ் தொடர் விளம்பரம் | நவம்பர் 29, 2019

தினமலர்  தினமலர்
பகைவர்களாக மாறும் நண்பர்கள் * களை கட்டும் விண்டீஸ் தொடர் விளம்பரம் | நவம்பர் 29, 2019

புதுடில்லி: இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் தொடர் குறித்து ரோகித் சர்மா, போலார்டு இணைந்து நடித்த ‘ஸ்டார்’ நிறுவன விளம்பரங்கள் களை கட்டியுள்ளன.

உலக கோப்பை தொடரின் போது இந்தியா, பாகிஸ்தான், இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் போட்டிக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ‘டிவி’ சார்பில் ‘ஸ்பெஷல்’ விளம்பரங்கள் வெளியாகும். இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.

இந்த வரிசையில் இந்தியா, விண்டீஸ் தொடர் குறித்து விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்காக இணைந்து விளையாடும் ரோகித் சர்மா, போலார்டு, வரும் தொடரில் எதிர் அணியில் எதிரிகளாக களமிறங்க உள்ளதை குறிக்கும் வகையில் விளம்பரங்கள் உள்ளன.

முதலில் வந்த விளம்பரத்தில்,‘விமான நிலையத்தில் இருந்து போலார்டை வரவேற்று காரில் அழைத்து வருவார் ரோகித். அப்போது ரேடியோவில்,‘ இந்தியா வென்றால் நன்றாக இருக்கும்,’ என போலார்டு பேசுவதை ரோகித் கேட்டு விடுவார். உடனே, வண்டி நின்று விட்டது போல பாசாங்கு செய்வார் ரோகித். நான் இருக்கிறேன் என இறங்கி காரை தள்ளுவார் போலார்டு. அந்த நேரம் பார்த்து ரோகித் கிளம்பிச் சென்று விடுவார், சிறிது துாரம் சென்று போலார்டு ‘பேக்கை’ துாக்கி வெளியே போடுவார். இதனால் காட்டுப்பகுதியில் கோபத்துடன் நடந்து செல்வார் போலார்டு.

தற்போது வெளியான மற்றொரு விளம்பரத்தில் ரோகித்தை, போலார்டு கோபப்படுத்துவது போல உள்ளது. அதாவது,‘ஓட்டல் அறையில் ரோகித் துாங்கிக் கொண்டிருப்பார். திடீரென போன் வரும். போலார்டு அழைத்ததாக ஓட்டல் ஊழியர் கூறுவார். மணியை பார்த்தால் அதிகாலை 4:00 ஆக இருக்கும். இப்போது ரோகித் கோபத்துடன் போனை வேகமாக கீழே வைப்பார். 

இதில் ‘குட் மார்னிங் புரோ கித், எங்களுடைய மோதலுக்கு முன் விழித்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்,’ என தெரிவித்துள்ளார் போலார்டு.

மூலக்கதை