இங்கிலாந்து அணி திணறல் | நவம்பர் 30, 2019

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணி திணறல் | நவம்பர் 30, 2019

 ஹாமில்டன்: நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டு அரைசதம்

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. லதாம் (105), நிகோல்ஸ் (16) விரைவில் வெளியேறினர். வாட்லிங் 55, மிட்சல் 73 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர்.  நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 4, வோக்ஸ் 3, கரான் 2 விக்கெட் சாய்த்தனர்.

பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணியின் சிப்லே, டென்லே தலா 4 ரன்னுக்கு கிளம்பினர். இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்து, 336 ரன்கள் பின்தங்கி இருந்தது. பர்ன்ஸ் (24), கேப்டன் ஜோ ரூட் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை