அமெரிக்காவில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் பனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது மர்ம நபர் ஒருவன் திடீரென துப்பாக்கிச்சுடு நடத்தினான். இதில் இரு சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதேபோல் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரெஞ்ச் குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபின் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சுட்டில் காயமடைந்தவர்களின் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை