அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் கவலைக்கிடம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் கவலைக்கிடம்

வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூ ஆர்லியன்சில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 11 பேர் சுடப்பட்டனர். அவர்களில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்சில் இன்று(டிச.,1) அதிகாலையில் மர்மநபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். நியூ ஆர்லியன்சின் கால்வாய் தெருவில் உள்ள சுற்றுலா மைய பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில், 11 பேர் சுடப்பட்டதாக என்ஓபிடி தலைவர் ஷான் பெர்குசன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இது குறித்த விசாரணையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மற்றும் பிற தகவல்கள் குறித்தும் லூசியானா போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு குறித்து தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அந்த பகுதி பரபரப்பானது. இது தொடர்பான மற்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


கடந்த 2016 ஆம் ஆண்டின் இந்த வார இறுதி நாட்களில், அமெரிக்காவின் போர்பன் தெரு பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்; 9 பேரும் காயமடைந்தனர்.

2014 ஜூன் மாதத்தில் போர்பன் பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.


மூலக்கதை