லாரா சாதனையை ரோகித் முறியடிப்பார்: வார்னர்

தினமலர்  தினமலர்
லாரா சாதனையை ரோகித் முறியடிப்பார்: வார்னர்

அடிலெய்டு: அடிலெய்டில் நடைபெறும் பாக்., அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் முச்சதம் அடித்தார்.

இந்நிலையில் லாரா சாதனையை முறியடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வார்னர், ''டெஸ்ட் அரங்கில், ஒரே இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் விண்டீசின் லாரா(400). இவரது சாதனையை என்னால் முறியடிக்க முடியவில்லை. இதை இந்திய வீரர் ரோகித் சர்மா முறியடிக்கலாம்.

ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடியபோது, இந்திய முன்னாள் வீரர் சேவக் நட்பு கிடைத்தது. 'டுவென்டி-20' போட்டியை விட, டெஸ்டில் நீங்கள் சிறந்த வீரராக உருவெடுக்க வேண்டும்,' என, சேவக் வலியுறுத்தினார். எப்படி டெஸ்டில் பீல்டர்களை தாண்டி பந்தை அடிப்பது என்பது குறித்தும் 'டிப்ஸ்' தந்தார்,'' என்றார்.

மூலக்கதை