லண்டன் கத்திக்குத்து ஐஎஸ் பொறுப்பேற்பு

தினகரன்  தினகரன்
லண்டன் கத்திக்குத்து ஐஎஸ் பொறுப்பேற்பு

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த வெள்ளியன்று லண்டன் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது வாலிபன் ஒருவன் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான். இதில்,  பெண் உட்பட 2 பேர் இறந்தனர். தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் வாலி பர் உஸ்மான் கானை  போலீ சார் சுட்டுக் கொன்றனர்.  லண்டன் வர்த்தக மையத்தில் குண்டு வைத்த வழக்கில் 7  ஆண்டு சிறை தண்டனை பெற்ற இவன், மும்பை தாக்குதலை போல இங்கிலாந்து  நாடாளுமன்றத்தின் மீதும்  தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியவன். இந்நிலையில், உஸ்மான் நடத்திய கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மூலக்கதை