2020, 'ஜி - 20' மாநாடு சவுதியில் நடக்கிறது

தினமலர்  தினமலர்
2020, ஜி  20 மாநாடு சவுதியில் நடக்கிறது

ரியாத்: அடுத்த ஆண்டுக்கான, 'ஜி - 20' மாநாடு, மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது.உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 20' அமைப்பு. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, வளர்ச்சி அடைந்த நாடுகள், இந்த அமைப்பில் அங்கமாக உள்ளன.இந்த ஆண்டுக்கான, ஜி - 20 மாநாடு, ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடந்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடக்கிறது.அடுத்த ஆண்டு, நவம்பர், 21 மற்றும் 22ல், இந்த மாநாடு நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை