அமெரிக்காவின் சவுத் டகோடாவில் சிறிய ரக விமானம் விபத்து: 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் சவுத் டகோடாவில் சிறிய ரக விமானம் விபத்து: 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான Pilatus PC-12 ரகத்தை சேர்ந்த சிறிய விமானம் ஒன்று சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட சில நிமிடங்களில் சாம்பர்லின் பகுதியில் இருந்த பாறைகளில் மோதி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், விமானி மற்றும் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயம் அடைந்த 3 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சவுத் டகோடாவில் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அப்பகுதியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை