திரிணாமூல் காங்கிரஸில் இருந்து முகுல் ராய் நீக்கம்: மம்தா நடவடிக்கை

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
திரிணாமூல் காங்கிரஸில் இருந்து முகுல் ராய் நீக்கம்: மம்தா நடவடிக்கை

திரிணாமூல் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து முகுல் ராய் நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த முகுல் ராய், திரிணாமூல் காங்கிரஸின் மாநிலங்களவைத் தலைவர் பதவியில் இருந்தும் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார். இந்நிலையில், கட்சியின் புதிய செயற்குழுவிலும் அவர் இடம்பெறவில்லை. சாரதா நிதி நிறுவன முறைகேடு குற்றச்சாட்டில் சிபிஐ-யால் விசாரிக்கப்பட்டுவரும் முகுல் ராய் கட்சியின் நடவடிக்கையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்.

மூலக்கதை