பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க

பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என, தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி,

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை எண்ணெய் நிறுவனங்களிடம் அளித்துவிட்ட காரணத்தால், விலை உயர்ந்து கொண்டே போவதாகக் கூறியுள்ளார். எனவே, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பினை மத்திய அரசே தன்னிடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் பயனை கலால் வரி, விற்பனை வரி என விதித்து மத்திய அரசு வருமானத்தை பெருக்கிக் கொள்வதாகவும், தற்போதைய கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு நாற்பது ரூபாய்க்கும், டீசல் விலை 30 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்று தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மூலக்கதை