நகைச்சுவை, வேடிக்கை, மகிழ்ச்சி என்னம்மா இப்படி கேட்டுட்டே...கங்குலியை கலாய்த்த அன்பு மகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நகைச்சுவை, வேடிக்கை, மகிழ்ச்சி என்னம்மா இப்படி கேட்டுட்டே...கங்குலியை கலாய்த்த அன்பு மகள்

கொல்கத்தா: கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது. இந்த  போட்டியை மிக குறுகிய நாட்களிலேயே பிசிசிஐ தலைவரான கங்குலி சாதித்து காட்டினார்.

வெற்றியை அடுத்து கங்குலி தனது இன்ஸ்டாகிராம்  பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். ‘டெஸ்ட் போட்டிக்கு கூடிய இந்த ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து  மகிழ்ச்சியடைவதாகவும் ரிலாக்சாக உணர்கிறேன்’ என அவர் பதிவிட்டிருந்தார்.

சவுரவ் கங்குலியின் இந்த பதிவை கண்ட அவரின் மகள் சனா கான், ‘நீங்கள் விரும்பாதது எது?’ என்று நகைச்சுவையுடன் கேட்டிருந்தார்.

அதற்கு  பதிலளித்த கங்குலி, ‘சனாவின் கீழ்படியாமைதான்’ என்று வேடிக்கையாக பதிலளித்தார். உடனடியாக இந்த பதிவிற்கு பதிலளித்த சனா, ‘தங்களிடம்  இருந்து கற்றுக் கொண்டது’ என்று சிரிப்பு ஈமோஜியுடன் கூறினார்.

மகள் மற்றும் தந்தையின் இந்த உரையாடல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ரசிகர்களிடையே மிகுந்த வைரலானது.

பலர் இந்த உரையாடலை ரசித்து தங்களது லைக்குகளை அளித்திருந்தனர்.

.

மூலக்கதை