இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: காலை இடறிவிட்ட வீரர் வெளியேற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்: காலை இடறிவிட்ட வீரர் வெளியேற்றம்

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த  போட்டியில், 24வது லீக் ஆட்டத்தில் எப். சி. கோவா அணி, ஜாம்ஷெட்பூரை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 17வது நிமிடத்தில்   ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ கேசில் ஒரு  கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனால் முதல் பாதியின்  முடிவில்  ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது  பாதியில் கோவா அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க  முடியவில்லை. 72வது நிமிடத்தில் எதிரணி வீரரை காலால் இடறி விட்ட கோவா வீரர் அகமது ஜோஹோ, சிவப்பு அட்டை காட்டப்பட்டு  வெளியேற்றப்பட்டார்.

இது அந்த அணிக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது.

முடிவில் ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை  வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.

.

மூலக்கதை