ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் முஃப்தி முகமது: விழாவில் மோடி பங்கேற்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஜம்முகாஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் முஃப்தி முகமது: விழாவில் மோடி பங்கேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக, முஃப்தி முகமது சயீத்(79) பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

ஜம்மு காஷ்மீருக்கு கடந்த டிசம்பர் 23ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, 28 இடங்களில் வெற்றி பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியும், 25 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. ஜம்மு பல்கலைகழகத்தின் கலையரங்கில் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக, முஃப்தி முகமது சயீத்(79) பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு , ஆளுநர் என் என் வோரா, பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.பாரதிய ஜனதாவின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் பலர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

இதனிடையே கடந்த 49 நாட்களாக இருந்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் பாஜக  கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.

மூலக்கதை