அயோத்தியில் பிரமாண்ட கோயிலை கட்ட வேண்டும்: காங்கிரஸ் விருப்பம்

தினகரன்  தினகரன்
அயோத்தியில் பிரமாண்ட கோயிலை கட்ட வேண்டும்: காங்கிரஸ் விருப்பம்

ஜெய்ப்பூர்: ‘‘அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது,’’ என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில் சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எல்லோரும் வரவேற்கின்றனர். அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாம் மகிழ்ச்சியாக மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை எல்லாரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை வைத்து கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் செய்தவர்கள், இந்த விஷயத்தால், அரசியல் ரீதியாக யாருக்கும் பயன் இல்லை என்பதை தற்போது உணர்ந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அரசின் பணிகளை மக்கள் விரும்புவதையும், காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை