சூரரைப்போற்று டப்பிங் விறுவிறு

தினமலர்  தினமலர்
சூரரைப்போற்று டப்பிங் விறுவிறு

‛இறுதிச்சுற்று' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‛சூரரைப்போற்று' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.. இந்த படத்தில் கதாநாயகியாக 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்இசை அமைக்கிறார்.

இப்போது சூர்யாவும், அபர்ணாவும் டப்பிங் பேச துவங்கி உள்ளார்கள். இருவரும் டப்பிங் ஸ்டுடியோவில் ஒன்றாக இணைந்து எடுத் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப்படம் ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கியவரும், இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

மூலக்கதை