முதல் இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

தினகரன்  தினகரன்
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து திணறல்

மவுன் மவுங்கானுயி: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து திணறி வருகிறது. பே ஓவல் மைதானத்தில் நடக்கு இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான நேற்று அந்த அணி 353 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (124 ஓவர்). பர்ன்ஸ் 52, சிப்லி 22, டென்லி 74, பென் ஸ்டோக்ஸ் 91 ரன் (146 பந்து, 12 பவுண்டரி), போப் 29, பட்லர் 43, லீச் 18* ரன் எடுத்தனர்.நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ 4, வேக்னர் 3, கிராண்ட்ஹோம் 2, போல்ட் 1 விக்கெட் வீழ்த்தினர்.  அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்துள்ளது (51 ஓவர்). ராவல் 19, லாதம் 8, கேப்டன் கேன் வில்லியம்சன் 51, டெய்லர் 25 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். நிகோல்ஸ் 26, வாட்லிங் 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சாம் கரன் 2, லீச், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.  கை வசம் 6 விக்கெட் இருக்க, நியூசிலாந்து அணி இன்னும் 209 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை