இலங்கையில் இடைக்கால அமைச்சரவை நியமனம்: அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
இலங்கையில் இடைக்கால அமைச்சரவை நியமனம்: அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு

கொழும்பு:  இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசில், பிரதமர் மகிந்த ராஜபக்சே, சாமல் ராஜபக்சே உட்பட 16 பேர் இடைக்கால அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜீத் பிரேமதாசா தோல்வி அடைந்ததால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா  செய்தார். இதையடுத்து, தனது சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை நாட்டின் புதிய பிரதமராக அதிபர் கோத்தபய நியமித்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அரசு அமைக்கப்படும் வரையில் அரசு நிர்வாகத்தை கவனிப்பதற்காக 16 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார். அவர் தனது சகோதரர்கள் மகிந்த ராஜபக்சே, சமால் ராஜபக்சே, ஒரு பெண் உட்பட 16 பேரை இடைக்கால அமைச்சர்களாக நியமித்துள்ளார். இவர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சரவையின் தலைவராக இருந்த போதிலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு எந்த துறையும் ஒதுக்கப்படவில்லை. இடைக்கால அமைச்சரவையில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு, நிதித்துறை ஆகிய முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிபரின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்சேவுக்கு வர்த்தகம், உணவு பாதுகாப்பு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.முன்கூட்டியே தேர்தல்இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் தான் தேர்தல் நடைபெறும். ஆனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு தேர்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழருக்கு வெளியுறவுஇலங்கை இடைக்கால அமைச்சரவையில் 2 தமிழர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரும், மூத்த மார்க்சிஸ்ட் அரசியல்வாதியான தினேஷ் குணவர்த்தனா (74), வெளியுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை