விமானத்தில் திடீர் உடல்நலக் கோளாறு சிறுநீரை வாயால் உறிஞ்சி முதியவரை காத்த டாக்டர்: நடுவானில் மனிதநேயம்

தினகரன்  தினகரன்
விமானத்தில் திடீர் உடல்நலக் கோளாறு சிறுநீரை வாயால் உறிஞ்சி முதியவரை காத்த டாக்டர்: நடுவானில் மனிதநேயம்

குவாங்சோ: சீனாவில் இருந்து நியூயார்க் சென்ற விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி எடுத்து மருத்துவர்கள் இருவர் காப்பாற்றியுள்ளனர்.  தெற்கு சீனாவின் குவாங்சோ நகரில் இருந்து நியூயார்க்கிற்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. விமானத்தில் பயணம் செய்த முதியவர் சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் அவதிக்குள்ளானார்.  விமானத்தில் பயணம் செய்த ஜாங்ஹாங், ஜாங்சியாவ் ஆகிய மருத்துவர்கள் முதியவரின் உடல்நிலையை சோதனை செய்தனர். பின்னர் சிறுநீரை வெளியேற்றும் வகையில் விமானத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க், சிரிஞ்ச் மற்றும் ஸ்ட்ரா ஆகியவற்றின் மூலம் சிறுநீரை வெளியேற்றும் முயற்சி பலனளிக்கவில்லை. அப்போது மருத்துவர் ஜாங்ஹாங்,, நோயாளிக்கு பொருத்தப்பட்டு இருந்த குழாய் மூலமாக தானே வாயால் சிறுநீரை உறிஞ்சி வெளியேற்ற தொடங்கினார். சுமார் 800 மில்லி சிறுநீரை அவர் வாயால் உறிஞ்சி வெளியேற்றினார். அதன் பின் முதியவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். மேலும், மருத்துவரின் இந்த துரித செயலுக்கு முதியவர் மட்டுமின்றி விமானத்தில் இருந்த அனைவரும் நன்றி தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் பணிபுரியும் ஹைக்கோவில் உள்ள ஹைனன் மருத்துவமனை நிர்வாகமும் இருவரையும் பாராட்டி கவுரவித்துள்ளது. மருத்துவர்கள் ஜாங்ஹாங் மற்றும் ஜாங்சியாவ் ஆகியோருக்கு தலா ரூ.13.92லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மூலக்கதை