நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் பற்றாக்குறை 3.7 லட்சம் கோடி: ஆய்வில் தகவல்

தினகரன்  தினகரன்
நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் பற்றாக்குறை 3.7 லட்சம் கோடி: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டு வரி வசூலில் 3.7 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் 24.6 லட்சம் கோடியை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் 2.4% மட்டுமே உயர்ந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  மத்திய, மாநில அரசுகளின் மொத்த வரி வசூல் 3.2%தான் உயர்ந்துள்ளது. இதனால் மாநிலங்களின் வரி வருவாயும் குறையும். எனவே, வரி வசூல் 3.7 லட்சம் கோடி குறையும். அடுத்த நிதியாண்டில் வரி வசூல் 14% அதிகரிக்கும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.  இந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது சந்தேகம்தான். அதோடு, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று 1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 12,000 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. எனவே, நடப்பு நிதியாண்டு முடிய 4 மாதமே உள்ள நிலையில், ஒரு லட்சம் கோடி திரட்டுவதும் சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது.

மூலக்கதை