குடியிருப்பு இடிப்பு வழக்கு: மறு ஆய்வு மனு ஏற்பு

தினமலர்  தினமலர்
குடியிருப்பு இடிப்பு வழக்கு: மறு ஆய்வு மனு ஏற்பு

புதுடில்லி:கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மராடு என்ற இடத்தில், கடல் பகுதிக்கு மிக அருகில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குடியிருப்பு உரிமையாளர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கவும், உத்தரவிடப்பட்டது. இந்த இழப்பீடு தொகை மீதான உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு, குடியிருப்பு உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை, பார்வையாளர்கள் மத்தியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.

மூலக்கதை