ரயில்வே தனியார்மயமாகாது: கோயல்

தினமலர்  தினமலர்
ரயில்வே தனியார்மயமாகாது: கோயல்

புதுடில்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ராஜ்யசபாவில் பேசியது,ரயில்வேயை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சில பணிகளை மட்டுமே, தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பீஹாரில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, 362 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, மாநிலத்தில், 55 ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன.

மூலக்கதை