வார்னர் சதம்: ஆஸ்திரேலியா அபாரம் | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
வார்னர் சதம்: ஆஸ்திரேலியா அபாரம் | நவம்பர் 22, 2019

பிரிஸ்பேன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சதம் கடந்து கைகொடுத்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 240 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய பர்ன்ஸ் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய வார்னர், டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதமடித்தார். தவிர இது, ஓராண்டு தடைக்கு பின் இவர் அடித்த முதல் சதம். முதல் விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்த போது யாசிர் ஷா ‘சுழலில்’ பர்ன்ஸ் (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அடுத்து வந்த மார்னஸ், தன்பங்கிற்கு அரைசதமடித்தார். தொடர்ந்து அசத்திய வார்னர், 150 ரன்களை கடந்தார். இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுக்கு 312 ரன்கள் குவித்திருந்தது. வார்னர் (151), மார்னஸ் (55) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை