இந்தியா–விண்டீஸ் அட்டவணை மாற்றம் | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா–விண்டீஸ் அட்டவணை மாற்றம் | நவம்பர் 22, 2019

மும்பை: இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் ‘டுவென்டி–20’ தொடருக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று ‘டுவென்டி–20’ மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக வெளியான அட்டவணைப்படி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் முறையே மும்பை (டிச. 6), திருவனந்தபுரம் (டிச. 8), ஐதராபாத் (டிச. 11) நகரங்களில் நடக்க இருந்தது. தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய அட்டவணை படி, முதல் போட்டி டிச. 6ல் ஐதராபாத்தில் நடக்கும். மூன்றாவது போட்டி டிச. 11ல் மும்பையில் நடத்தப்படும். இரண்டாவது போட்டி திட்டமிட்டபடி டிச. 8ல் திருவனந்தபுரத்தில் நடக்கும்.

மூலக்கதை