டிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு

தினமலர்  தினமலர்
டிரம்புடன் இம்ரான்கான் தொலைபேசியில் பேச்சு

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தொலைபேசியில் பேசினர்.இந்த பேச்சின் போது ஆப்கானிஸ்தானில் பிணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தபல்கலை பேராசிரியர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும்ஆப்கன் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில் இது நேர்மறையான முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் காஷ்மீர் பிரச்சினையில் சுமூகமாக தீர்வு காண அமெரிக்க அதிபர் தனது முயற்சிகளை தொடர வேண்டும் என்றும் இம்ரான் கான் டிரம்பிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வரும் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது.காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா உறுதிபட கூறி வரும் நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் அவ்வப்போது கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை