பூஜ்ஜியம் மார்க் பெற்ற மாணவியை பாராட்டிய கூகுள் சுந்தர் பிச்சை

தினமலர்  தினமலர்
பூஜ்ஜியம் மார்க் பெற்ற மாணவியை பாராட்டிய கூகுள் சுந்தர் பிச்சை

புதுடில்லி, சமூக வலைதளத்தில் மாணவி ஒருவர் தான் தேர்வில் பூஜ்ஜியம் மார்க் பெற்றதை பதிவிட்டதற்கு கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார்.
சரபினா நான்ஸ் 26, என்பவர் புகழ் பெற்ற நிறுவனமான கலிபோர்னியா பல்கலையில் வானியற்பியலில் பி.எச்.டி., செய்கிறார். வானியற்பியல் சூப்பர்நோவாக்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்.அவர் இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மார்க் பெற்றதாகவும், அதற்குப் பின்னர் தனது துறையை மாற்றி 'ஆஸ்ட்ரோபிசிக்ஸ்' துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். மாணவியின் இந்த டுவிட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, அவரை பாராட்டியுள்ளார்.

மூலக்கதை