ஆஸி.,யில் நிறைமாத கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்

தினமலர்  தினமலர்
ஆஸி.,யில் நிறைமாத கர்ப்பிணி பெண் மீது தாக்குதல்

சிட்னி: சிட்னியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட உட்கார்ந்திருந்த நிறைமாத முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணை மனிதாபிமானம் இல்லாமல் கண்மூடித்தனமாக ஒருவர் தாக்கினார். இது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓட்டலுக்கு நேற்று முன்தினம் (நவ.,20) மூன்று பெண்கள் வந்திருந்தனர். அதில் ஒருவர் நிறைமாத கர்ப்பிணி. உணவுக்காக காத்திருக்கும் போது, மூவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் அருகில் வரும் நபர், அவர்களிடம் பேச்சு கொடுத்தார். திடீரென, அவர்களை தாக்கியவர், கர்ப்பிணி பெண்ணை கண்மூடித்தனமாக குத்துவிட்டார். இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த பெண்ணை உதைத்தார். அதற்குள், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதால், ஆதாரத்துடன் கைது செய்த போலீசார், அந்த நபருக்கு உடல் ரீதியிலாக தீங்கு விளைவித்தல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளியே வரமுடியாத வகையில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனாலும், தாக்குதல் நடத்தியதன் காரணத்தை போலீசார் கூற மறுத்துவிட்டனர். நிறைமாத கர்ப்பிணி பெண் என்றும் பாராமல், இவ்வாறான மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு உலகின் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

மூலக்கதை