' பருவகால எமர்ஜென்ஸி ' - இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை

தினமலர்  தினமலர்
 பருவகால எமர்ஜென்ஸி   இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை

லண்டன்: ' பருவகால எமர்ஜென்ஸி ' - என்ற வார்த்தை, இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ஆக்ஸ்போர்டு டிக் ஷனரி தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து உலக நாடுகள் பெரும் கவலை அடைந்து வருகின்றன. சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள்கூட பருவகால மாற்றம் தொடர்பாக அதீத கவலையை தெரிவித்தனர்.' பருவகால எமர்ஜென்ஸி ' ( 'Climate emergency' ) என்ற வார்த்தை 2019 ஆம் ஆண்டின் மிக முக்கியமான மற்றும் முக்கியமாக விவாதிக்கப்பட்ட சொற்களில் ஒன்றாகும்' என்று ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்த வார்த்தை பயன்பாடு 10 ஆயிரம் சதவீதம் அதிகரித்து இருந்தது. மேலும் காலநிலை மாற்றத்தைக் குறைக்க அல்லது நிறுத்த அவசர நடவடிக்கை தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு நாடுகளில் முக்கிய சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். பருவகால மாற்றம் என்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் மொழி வழக்கில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற ஆய்வில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

' பருவகால எமர்ஜென்ஸி ' ( 'Climate emergency' ) என்ற வார்த்தை 2019 ஆம் ஆண்டில் அதிகம் பிரயோகப்படுத்தப்பட்ட வார்த்தையாக ஆக்ஸ்போர்டு அறிவித்துள்ளது.

மூலக்கதை