கோல்கட்டாவில் ‘பிங்க்’ நிறத்தில் ‘சுவீட்’ | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
கோல்கட்டாவில் ‘பிங்க்’ நிறத்தில் ‘சுவீட்’ | நவம்பர் 22, 2019

 கோல்கட்டா: இந்தியாவில் முதன் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்கும் கோல்கட்டாவில் சுவீட்டுகளும் ‘பிங்க்’ நிறத்தில் தயாரித்து விற்கப்படுகின்றன. 

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கியது. 

இதற்காக கோல்கட்டா நகரமே ‘பிங்க்’ (இளஞ்சிவப்பு) நிறத்தில் மாறியுள்ளது. இதனிடையே இங்குள்ள சுவீட் வகைகளும் நிறம் மாறியுள்ளன. பிரபலமாக உள்ள ‘சந்தேஷ்’ என்ற சுவீட் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. 

இதற்கான போட்டோவை பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,‘கோல்கட்டாவில் சுவீட்டுகளும் ‘பிங்க்’ நிறத்தில் மாறியுள்ளன,’ என தெரிவித்துள்ளார். 

மூலக்கதை