கவர்ச்சிக்கு தயார் என்கிறாரா பூமிகா?

தினமலர்  தினமலர்
கவர்ச்சிக்கு தயார் என்கிறாரா பூமிகா?

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடித்து வரும் பூமிகா, ‛‛யுடர்ன், கொலையுதிர்காலம்'' படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‛ரூலர்' என்ற படத்தில் நடித்துள்ளார். டிசம்பர் 20-ந்தேதி வெளியாகும் இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். வேதிகா, சோனல் சவுகான் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள இந்த படத்தில் பூமிகாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் 2009ல் எடுக்கப்பட்ட கவர்ச்சி போட்டோவை இப்போது வெளியிட்டுள்ளார் பூமிகா. புல்லட் பைக்கில் படுத்த நிலையில் செக்ஸியாக இருக்கும் அந்த பழைய போட்டோ இப்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தபோது கூட கவர்ச்சி விஷயத்தில் எல்லை தாண்டதவர் பூமிகா. குறிப்பாக தனது உடல் அழகை இந்தளவுக்கு வெளியில் காட்டாதவர். அப்படிப்பட்டவர் இப்போது ஏன் இந்த போட்டோவை வெளியிட வேண்டும். மீண்டும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்கிறாரா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

மூலக்கதை