25 ஆயிரம் ச.அடி அரண்மனை வீட்டில் சிரஞ்சீவி

தினமலர்  தினமலர்
25 ஆயிரம் ச.அடி அரண்மனை வீட்டில் சிரஞ்சீவி

தெலுங்குத் திரையுலகத்தின் வசூல் நடிகராக விளங்கியவர் சிரஞ்சீவி. தமிழில் எப்படி ரஜினிகாந்தோ தெலுங்கில் சிரஞ்சீவி. ரஜினிக்கு முன்பாகவே சொந்த அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று பெரிய வெற்றி பெறாமல் கட்சியைக் கலைத்து காங்கிரசுடன் இணைத்தார். அரசியலில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சிரஞ்சீவிக்கு அரசியல் சீ..சீ. இந்தப் பழம் புளிக்கும் கதையாகவே அமைந்தது. அதற்கு காரணம் அவருடைய வீட்டின் வாஸ்து என்றார்கள்.

சென்னையை விட்டு முழுவதுமாக 2003ல் ஐதராபாத்திற்கு குடி புகுந்தார் சிரஞ்சீவி. 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வீட்டின் வாஸ்து சரியில்லை எனத் தெரிய வந்ததும், அந்த வீட்டை இடித்துக் கட்ட அவரது மருமகள் உபாசானா ராம்சரண் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவரது ஆலோசனையின்படி மும்பையிலிருந்து கட்டட வடிவமைப்பாளர்கள் வந்து புதிய வீட்டை கட்ட ஆரம்பித்தார்கள்.

ஒரு பிரம்மாண்ட அரண்மனை போன்று உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடு 25 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. அனைத்து நவீன வசதிகளும் முழுமையான வாஸ்துவுடனும் உள்ளதாம். டோலிவுட்டில் தற்போது அந்த வீட்டைப் பற்றிய பேச்சுதான் அதிகம் இருக்கிறது என்கிறார்கள்.

மூலக்கதை