பொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொன்நகை வாங்குவோர் முகத்தில் கொஞ்சம் புன்னகை தெரிகிறது.. காரணம் இதுதான்

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.29.096 என்ற அளவுக்கு, விற்பனையாகிறது. அதாவது தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. சென்னையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 3,637க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தளவில், விலை 10 காசுகள் குறைந்து ரூ.48.30க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை