இறுதிக்கட்டத்தில் எம்ஜிஆர் மகன்

தினமலர்  தினமலர்
இறுதிக்கட்டத்தில் எம்ஜிஆர் மகன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன் ராம், இயக்கத்தில் உருவாகி வரும் படம் எம்.ஜி.ஆர் மகன். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் துவங்கப்பட்டது. சசிகுமார், மிருணாளினி சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விவேக் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார். நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஒரே கட்டமாக தேனியிலேயே படமாக்கி முடித்துள்ளனர். இதனை சசிகுமார் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது எடிட்டிங் டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மூலக்கதை