மலையாள நடிகர் சீனிவாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தினமலர்  தினமலர்
மலையாள நடிகர் சீனிவாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்த நிலையில் சென்னை செல்வதற்காக நேற்று கொச்சி விமான நிலையம் வந்த சீனிவாசனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் சீனிவாசனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

திடீர் உடல்நலக்குறைவால் அவரது சென்னை பயணம் செய்யப்பட்டது அவரது மகனும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் அருகிலிருந்து கவனித்து வருகிறார்.

மூலக்கதை