ராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்கள்

தினமலர்  தினமலர்
ராஜமவுலி படத்தில் இணைந்த ஹாலிவுட் கலைஞர்கள்

இந்தியாவின் மிகப் பிரம்மாண்டமான பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்தும் ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்கிறார். தற்காலிக தலைப்பாக ஆர்.ஆர்.ஆர் என்று பெயரிட்டுள்ளனர். பாகுபலி கற்பனை கதை. இந்தப் படம் நிஜ சரித்திர கதை என்று கூறப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது என்கிறார்கள்.

இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, ஹிந்தி நடிகர் அஜய்தேவ்கான், சமுத்திரக்கனி, அலியாபட் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் ரூ.400 கோடி செலவில் தயாராகிறது.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்க ஹாலிவுட் நடிகை ஓலிவியா மோரிஸை தேர்வு செய்து இருப்பதாக அறிவித்து உள்ளனர். மேலும் தோர், கிங் ஆர்தர் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரே ஸ்டீவன்சன் வில்லனாகவும், ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் ஆகிய படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி வில்லியாகவும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

மூலக்கதை